Links

Monday, June 9, 2008

சென்னையில் ஒரு விடுமுறைக்காலம்

தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் அந்நிய கணிபொறி நிறுவனகளுக்கு குப்பை கொட்டும் எல்லோருக்கும் சமர்ப்பணம் !!!!!

நன்றாக ஞாபகம் இருந்தது காலை 5 மணி
சென்னைல்யில் வீசிய கோடை காற்று பெங்களூர் குளிரை விட நன்றாய் இருந்தது

மாநகர பேருந்தில் வீடு சென்ற போது வழியில் திறந்திருந்த கடைகளை பார்த்த போது " பெங்களூரில் இந்நேரம் மாடு கூட எழுந்திருக்காது" என நினைத்தேன்

வீட்டை அடைந்த போது அம்மா வழக்கம் போல் " என்னடா இளசிகிட்டே போற" என்றாள்
பயண அசதியால் சற்று கண் அசந்தேன்.ஏ.சி பேருந்தில் வந்த போது இல்லாத தூக்கம்
அனல் வீசும் என் இல்லத்தில் கிடைத்தது.
பெங்களூரில் pizza விழும் Tomato Sauce லும் கிடைக்காத சுவை

அம்மா சுட்ட தோசையிலும் தக்காளி சட்னியிலும் கிடைத்தது

இன்று ஞாயிறு
முன்பெல்லாம் காலையில் என்னை சீக்கிரம் எழுப்பி விடும் அம்மா
இன்று என்னை எழுப்பவில்லை என் கஷ்டம் அவளுக்கும் தெரிந்திருக்கிறது போலும்

இன்று விடுமுறையானாலும் நாளை பெங்களூர் செல்ல வேண்டுமே என்ற எண்ணம் வந்து விட்டது

மதியம் சாப்பிடும் போது அம்மா கேட்டாள், " பெங்களூரில் சாப்பாடு எப்படி ?"
நான் என்னவென்று சொல்ல
சர்க்கரை தண்ணி போல் இருக்கும் சாம்பார் பற்றி சொல்வதா அல்லது
விஷம் போல் இருக்கும் ரசம் பற்றி சொல்வதா - ஒன்றும் புரியாமல்
"ஏதோ சுமாரா இருக்கும்மா! ", என்றேன்

என்றைக்கும் இல்லாத திருப்தியுடன் இன்று மதியம் தூங்கினேன்.

யாரோ தட்டும் சத்தம் கேட்டது அம்மாவின் குரல்
" மணி ஆறுடா மைசூர் எக்ஸ்பிரஸ் 9:30 மணிக்கு சீக்கிரமா எழுந்து பேக் பண்ணு "
வேண்டா வெறுப்புடன் படுக்கையை விட்டு எழுந்தேன்

- இனிய அனுபவங்களுடன்
ரகுநாதன்

1 comment:

  1. So poetic, we expect more like this.

    A good one.

    ReplyDelete

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More